Friday 20 August 2010

மலரின் சாரல்....................,


அதிகாலை தானெழும்பி
நந்தவனப் பூவென்று
தான் வாழ பூப் பறித்தாள்
நந்தவன் சென்று!

காலை அருந்த தேனீருக்கு
வழியின்றி
அவசர அவசரமாய்
சரம் தொடுத்து அதை
அழகழகாய் கூடைக்குள்
அடுக்கி தலை சுமந்து
ஓடி ஓடி சென்றாள்
கோயில் வாசலுக்கு!


உள்ளிருக்கும் கடவுளுக்கும்
தெரிந்த கதையை
திரும்பச் சொல்லி
நினைவு படுத்தி
காத்து நின்றாள்
வருவோர் போவோர்
முகம் பார்து தன் பூவை
விற்பதற்காய்!

கிழிந்த ஆடை மற்றவர்
கண் தைக்க
வயிற்று பசி இசை பாட
தன் தலைச் சூட பூ
மற்றவர் தலை சேர
விதம் விதம் மாய்
கோர்த்தால் கடவுளுக்கும்
சேர்த்து இன்றாவது
தன் வியிற்று பசி போகாதா
என்ற ஏக்கத்தில்....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இட்டவாசம் எடுத்தவாசத்தை
தொலைத்த வாசமாக்கி விட்டு!

கொண்ட வாசம் மறந்ததால்

இல்லாவாசம்  பேசுகின்றது         

எதனால்!!!

இல்லாமை தந்த இயலாமை
வந்தாலோ உள்ளம் ஒர் வாசம்
தந்து அள்ளிக்கொள்ள இயலாது
ஒன்றை இரண்டாக்கி
கொள்கை இல்லா தலைவனாகி
கொள்ளை   பேனது    !!!!!!!!

கடவுள் கொடுத்த வர்ணம் 
மாறப் பூவிற்கு !!கொடுத்த   வாசம் மறந்து

இட்டு ஒர் வாசம்    பேசி               
பொல்லா பூவாய் பொல்லாப்பு

கூறினாலும்!!

காட்டின் மழைக்கவிதையாகி
கசத்த நினைவை சாபமாய் கொட்டினாலும்

முற்றமில்லா காட்டுக்குள்ளும்

மாறவாசத்தோடே மலரும் இந்த பூ

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.

தன்னைக் கொடுத்து வையத்து 
வாசம் கொண்ட
மலரின் கண்கள் !சிந்தி சிதறு சிறு 
துறல் கற்றில் !!!இருப்பதுவும்
கொடுத்ததும் இறை கண்ணீர்துளி மட்டுமே
 என்றாலும்!!!எட்டவே நின்று எறியும்
கற்களை தட்டித் தடுக்கவே
தண் டனை கொடுக்கா முற்களை 
பக்கத்து துணையாய் கூடவோ கொடுத்தான்!!
பக்கம் தெரிய  பக்கமான
பக்கத்து மானிடன் பக்குவம்
இல்லாது  பதறி பறித்து
பகடைக்காய் ஆக்கி
பயனும் அடைத்த பின்!! சட்டென
தடுமாறி  கைவிட்டதால்
பட்ட காயத்தை பக்குமாய்
மறைத்து  ஈட்டியாய் பாய்ந்தான்
 முற்கள்ளை தப்பொன!!!
மலர் கொண்ட மென்மை
உண்மையானாலும்   தன்மென்மை
கண்டும்  தன்னையோ தவறு என்றவரை
 அழிக்கும்நியதியை எப்போ மாற்றும் 
இயற்கையென ஏக்கத்தோடு  காத்துகிடக்கு!!
நியதிக்குள் சிக்கியோ வாசம் இறப்பால்
பேசப்படும் நியதியை மாற்றம் பேசும்வர்த்தை
உண்மையின்றி போனதால்................



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


                                                                                                                                                                                                                               அதிகாலைக்கதிரவ ன்
                                                 எனைத்தொட்டுவந்த முகவரி!!
பூங்காற்றாய் தென்றல் வீசியதால்
வாசம் தந்த முகவரி!!
வண்டு தேடிய தேனைக்
கொடுத்த  முகவரி
மங்கையிவள் கூந்தல்
ஏறியதால் மன்னன் தந்த முகவரி
கல்லறையில் கல்லாய்
உறைந்தவனுக்கு நான்
கொடுத்த முகவரி
தந்தவனக்கு நானே கொடுத்த
அழகு முகவரி.......

                                                                 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
     



  இறைவா!!
உன் படைப்பில்
மலர்ந்தே உதிர்ந்த
பல வர்ண இதழ் சேர்த்து
உனக்காய் தருகின்றேன்
அழிந்திடும் மனித நேயம்
மீண்டும் பூமியில் பூத்திட

அரக்க இதயங்கள்
என்றும் இறந்தே பிறந்திட
எல்லோர் இதயங்களிலும்
உண்மை அன்பு பூத்து
மகிழ்ந்திட

இரத்தங்கள் இல்லாப் பூமியில்
தென்றல் மலர் தொட்டு
பூமியெங்கும் பூக்களின்
வாசம் வீசிட

மனிதர்கள் மலரின்
மென்மையோடு
என்றும் வாழ்ந்திடும்
வாழ்விற்காய் தூவுகின்றேன்
மேலும் மேலும் பூக்களை
உனக்காய்......
                                                          ******************************
                                                                 


இதழ்சிரிக்கும் பூக்கள்

இவள் முகம் ஏந்த!
பூவையிவள் முகம்
புதைத்தாள் பூக்களின்
இதழ்களில் _தன் முகம்
மறந்து தரணியில்
தான் வாழ
தவிக்கும் இவள் இதயத்தை
தூங்கவைத்தது பூக்கள்
தன் சோகம் மறந்து....

                                                          *******************************
                                                               

என் காட்டுக்கள் மலர்ந்திட்ட
என் மலரே..
உன் அழகு கண்டு
இதழ் தொட்டு
விளையாடி ரசித்திட்ட
நாட்கள் என் இதயத்தில்
வாழ்ந்திட்டாலும் இன்று
என் இதயத்தில் உன்
வர்ணங்களின் அழகெல்லாம்
தியாக தீபங்களாய் மாற

உன் மாதத்து நாளெடுத்து
உயிரின் உயிர்களுக்கு
தலைவணங்கி
உன் தூய்மை தொட்டு
நான் வணங்கி நிக்கின்றேன்
உன் தூய்மை என்னையும்
தொட்டு நிற்க வேண்டும்
என்று....
                                                        *******************************
                                                               

சிகப்புரோஜாவே உன்னை
மதுக்கிண்ணத்தில்
அடைந்து ரசித்தவன்
யார்?
மென்மைபுரியாத
அரக்கனோ...
மெழுகுதிரி ஏற்றி
ரசித்திருக்கின்றான்!

இவனை!
முற்களால் காயப்படுத்தாதே
முகவரியில்லா முள்வேலிக்குள
சிறையிடு! உன் மென்மை
அறியாதவன் இருந்தும்
இல்லா மானிடம்!

இவ்வுலகில்
உன் மென்மை என்ன
மனிதனையே ரசிக்க
தெரியாதவர்கள் தான் அதிகம்....

                                                     *******************************

                                                               

என்
வெள்ளை ரோஜாவே
உன் இதழில் தான்
எத்தனை தேன்துளிகள்
வண்டுற்காய்...

No comments: