Wednesday, 27 August 2008

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஆதி அந்தம் தேடிய தமிழ்
ஆண்டவனுக்குப் பிடித்த தமிழ்

விதி வந்தும் அழியாத் தமிழ்
வீதியில் நின்றும் தொலைந்திடா
தமிழ்

அகதியாய் அலையும் தமிழ்
வறுமையிலும் மானம் காத்திடும் தமிழ்

எரியும் தீயில் எரிந்த தமிழ்
சாபலிலும் வீரமாய் பூத்திடும் தமிழ்


அஞ்சா நெஞ்சம் கொண்ட தமிழ்
யாரிடமும் தோற்க்காத் தமிழ்

வரலாற்று வலி கண்ட தமிழ்
வழி மாறிடா இன்பத் தமிழ்

உண்மைக்காய் வாழும் தமிழ் என்றும்
சரித்திடம் படைத்திடும் அன்புத் தமிழ்

2 comments:

Anonymous said...

காலத்தை வென்ற தமிழின் கவிதை துளிகள் அருமை.

சு.கஜந்தி said...

நன்றிகள் என் படைப்புக்கள் உங்களையும் கவர்ந்து நிற்பதற்கு,,,,,