Monday 4 February 2008

சுதந்திரம்

வருடத்தில் ஓர் நாள்
சுதந்திரமில்லாச் சுதந்திரம்
சுதந்திரமாய் வந்து போக
சுதந்திர நாட்டின் சுதந்திரதை
இப்படிக் கண்டேன்....
தமிழ் அரசியல் கைதி 11 வருட ...
பெண்ணின் கற்பதனை அழிக்கும்
அரக்கன் கையில் ஓர் சுதந்திரம்
எப்போது சுதந்திரமாய் இருக்கக்
கண்டேன்


கருவோடு தாய்மை சிதைத்து
பெண்ணிற்கு விடுதலை கொடுக்கும்
அரக்கர் கையில் ஓர் சுதந்திரம்
எப்போது சுதந்திரமாய் இருக்கக்
கண்டேன்

அடுப்பில் இல்லா தீயால் ஊரையே எரித்து
எரிந்த பிணங்களுடன் கருகிய ஊரின்
நிலங்களுக்கு விடுதலை கொடுக்கும்
அரக்கர் கையில்  ஓர் சுதந்திரம்
எப்போதும்  சுகந்திரமாய் இருக்கக்
கண்டேன்....

வீதிக்கு வந்த இனம் இருக்க இடமில்லா தன் நாட்டில்
பெய்யும் மழையோடும் அடிக்கும் வெயிலோடும்
 காடுகளின் மரநிழல் கூரையில்
வாழ வழியின்றித் தவிக்கும் தவிப்பை,
 ரசிக்கும் அரக்கன் கையில்
ஓர் சுதந்திரம் சுதந்திரமாய் எப்போதும்
சிரிக்கக் கண்டேன்

தாயில்லாப் பிள்ளையும்
தாயப்பாலில்லா பிள்ளையும்
அழுதழுது சாகும் கொடுமை கண்டு
ரசித்த அரக்கன் கையில் ஓர் சுதந்திரம்
எப்போதும் சுதந்திரமாய் இருக்கக் கண்டேன்

தாய் நாட்டின் தாயின் கண்கள்
எப்போதும் அழுது தவித்திடும்
கண்களாய், மரணத்தின் வாசல்
நின்று ,தவிக்கும் சுதந்திரத்தைப் போல்
எப்போதும் இப்பதையே சுகந்திரமாய்கண்டேன்..

No comments: