Sunday 10 March 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மாமன் கண்மணிக்குள் சிக்கி
விட்ட என் மணிகளை
சின்னச்சின்ன சொற்கள் எடுத்து
வானவில் வர்ணம் தொட்டு
வரைந்தான்  ஒவியமாய்
Bildergebnis für மழை
 வில்லின் அழகில் சொல்லின்
வடிவில் பத்திரமாய்
நெஞ்சுகள் துடிக்க தித்திக்குது இதயத்தின்
உணர்வெங்கும் மாமன் நினைவுகள்

 கற்கள் வடிவில் பேச்சுகள்
சொற்கள் இன்றி போன மௌனம்
துன்பம் துணையாக வந்தபோதும்
 இழையதன் வடிவாய்
உறையாது ஒடியது மாமன் உணர்வு
என் இதயமெங்கும்

தேடலின் இடையே வரும் தடையின்
 நிமிடமாய் யோசனையின்றிய இரவாய்
காரணமின்றி நனையும் மழையின்
துறல்களில் எதிரோ நடந்தது மாமன்
நினைவு 
கைபிடித்திட  நேரங்களில்
கையணைத்து தூங்கிடும் என்
குட்டியானையின் வடிவில் தட்டிவிட
முடியாது தள்ளிவிட முடியாது கூடவே
நிக்கின்றது மாமன் உயிர்!!!!!

No comments: