Wednesday, 25 March 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

தாலாட்டும்மடியோ!  மரணத்தை
பரிசாக்கியது காலத்தை
காரணமின்றி அழித்திட்டு!
பாராட்டியவாயோ பாறையானது
காரணத்தை அறியாது!
புகழ்பாடிய கவியோ
அறுதெறிந்தது கனவின்
அர்தங்கள்  கேளாது!
வாயாடிய குருவியோ வார்தைகள்
இழந்தது தனியானது நேசத்தின் சுவடுகள் தேடி!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனைகள் ஏமாற்றிட
கனவுகள் கருக்களைய
வாரியணைத்த தலையணை
முள்ளாதால் மாத்திரைகள்
தாலாட்டு பாடியது உறங்கிட!!

Wednesday, 11 March 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒவ்வொறு முறை ஏமாற்றம்
ஒவ்வொறு வலியை தத்தாலும்!
ஒவ்வறு வலிகளும் என்னை
உளியில்லா கண்ணீர்கொண்டு
ஒவியமாக்கி சிரிக்கின்றதே !எப்படி!!
நம்பிகையென்னும் உயிர்!
இன்னும் இதயமாய் துடிப்பதால் தானோ!!

Saturday, 7 March 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

கோழைக்குள் வந்த காதல்
மனதோடு மடிகின்றது!
வீரனுக்குள் வந்த காதல்
கைபிடித்து நடக்கின்றது!!
ஆசைக்குள் வந்த காதல்
அசிங்கத்தால் அழுகின்றது!