Tuesday, 13 May 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் இதயசுவர்கள் கூட

கேட்டிடா என் இதயத்துடிப்பு

உன் அருகே   வரும் போது
உன் சுவாசகாற்றின்  தீண்டலால்
என்காதுவரை ஒலிக்கின்றதே
எதனால் !!
இதன் உணர்வுதான் காதலென்றால் !1
உன் உயிர் வரை
என் உயிரும் துடிக்கும்!!




Sunday, 11 May 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

கருவில்சுமந்த வலியை
மறந்த தாய்மை
காப்பாற்றா பிள்ளைகள் 
தந்தவலியோடு புன்னகைத்து
உயிர் சுமக்க !வயிறு பசிக்க!
உழைக்க  எழுத்தபோது
முதுமை தடுக்கும்  வலியால் 
 விழிகளால்   அழுகின்றது!!! 


Friday, 9 May 2014

சத்தமில்ல சங்கீதம்

சிந்தனை கொள்ளுதடி
என் நிந்தனை நீயானதால்
எண்ணங்கள் வதைக்குதடி
என்னை நீ பிரிந்தால்
காயங்கள் கணக்குதடி
காயமே நீயாய் போனதால்
கண்ணீர் வடியுதடி 
கரமே நீ அறுத்ததாள்
மெல்ல நடந்தேனடி
 நடக்கும் இடமெங்கும்
கண்ணே  நீயே வந்தாயடி
கவியாய் தொலைந்தேனடி
புரியவர் காயம் தந்தாரடி
மறக்க சொன்னரடி மறந்திட
கற்றுதரமலலே!!
இறக்க சொன்னாரடி 
இறந்திடும்  விதியையெழுதமலே!!
விந்தையுலகத்து மயமானய் போனேனடி
கருணையுள்ளவர் கண்தொலைவிலும்
கானேனடி
உன்னைச் சேரும் நாள் எங்கோ
தொலைந்தடி
 விடியத இரவின் இருளே  நீ
தொலைவாய்  சிரிக்க
உயிரென்று ஒளியற்று வாடுதடி
சத்தமேயில்லாது!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,


 காதல்  கொண்டு காதல் பேசி
காதலை வென்று  
காதலாய் வாழ்ந்த
காதல் மச்சான்  !!கொஞ்சும் காதல்
அஞ்சும் வாழ்கை
அவர் அவர் 
எண்ணங்களின்
கொள்கையாக்கி 

இங்கே  நின்று 
தனியாய்ப் புலம்பி
எதுவென கேட்க்க
காதல்! மௌனம் கொண்டு 
உண்மை தேடி
மௌனமாய் சிதையுது கண்ணின் முன்னே!!