Thursday 19 July 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


                                                    என் உயிர் மொழி.......


மலரொன்று பிறந்திறந்து
ஆண்டுகள் கடந்தும் அதன்
அழியா  நினைவுகளை
மெல்ல சேர்த்தெடுத்த
தேய்பிறைக் காற்று
வளர்பிறைத் தென்றல் தெட்டு
முழுநிலவாய் அவளை வரைய!!
ஒளியாகி ஒவியமாகி நிலவாய்
சிரிக்கின்றாள் என்கனவை
ஆண்டுகொண்டு
கோடைகாலத்து காற்று
வசந்த காலத்து தென்றல்
தொட்டு ரோஐா மலர் எடுத்து
மாலையாகி சூடியதால்
இன்று மட்டும் உயிர்பெற்றாள்
என் கனவில் !!இல்ல உலகமதில்
நில்லாத அவள் முகம் எப்பவும்
அழியா ஒவியமாகியது என் விழியில்………

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,


எப்படி சொன்னால் புரிவார்..................


ஆண்டுகள் பல போனதாம்
ஆண்டோடு நானும்
தொலைதாய் காலம் சொல்ல
அதிசயம் எதுகுமின்றி
அசையுது நினைவு கடந்த
ஆண்டின் நினைவுகளை
தொலைத்திட்ட நிமிடத்திடம்
கொஞ்சம் கடன் வேண்டி!!
எப்போதும் எவரும் காத்திட
நினைவை என் உணர்விற்குள்
கொஞ்சம்  அடகு வைத்திட்டு!!
எப்படிச்சொன்னாலும் புரியா
 உணர்வை எப்படி புரியாதவரிடம்
சொல்வதென்பதை  சிறிதும்
சித்திக்காது !!
எப்பவும் பெண்ணின் உணர்வு
எவருக்கும் புரியா உணர்வானதால்
அதை எப்படி சொன்னாலும் புரியாது என்பதால்
அப்படியோ விட்டு!! 
பெண்ணின் சொல்லாக் காதலை
புரிகின்றமனசு!!அது எப்படி
 என்று என்னைக்கேட்காது!
தன்னைக்காக்கும் புரிதல் என்பதால்
சண்டை போடாது!!
தன்னை மட்டும் சிந்துபவர் உன்னைச்சிந்தித்தால்
எப்படி புரியுமென நீ எப்பவும்
 சிந்திக்காமல் நடைபோடு
பெண்ணே!

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

                                                                      கலையே!!!


என் கனவில் வந்து
என் கண்ணீர் துடைத்து
என்னைக்காப்பவளே  !நீ
மண் மரணிக்க விண்ணுக்கு சென்று
ஆண்டுகள் கடந்தும் அழிய வரமாகி
எனக்குள் ஏன் வாழ்கின்றாய் !!
நான் மண்ணில் இறந்து
உயிரில்லா உடலாகி நரகதின்
வாசலில் எரிக்கும் தீக்காய்
காத்திருப்பவள் என்பதாலா!! இல்ல!!
உயிரற்ற உடலெடுத்து
இதயமதை அறுத்தெறிந்த
பொய்யான முகங்களின்
புன்னகையும் பாசமும் என்னை
அழித்திடுமென்பதாலா!!!
இருக்கும் வரை பெண் வாழ்வே போராட்டம்
எதைக் கொண்டு
மாற்றுவது பாருக்குள் என்பதாலா!!
இல்ல கற்பனைகள் கவி பாட
நீ சொல்லிடா காமதிற்காய்
அவளை தேடியழித்து முற்சந்தியில்
நிறுத்திடுவார் மானிடரென்பதாலா!!
கடசி
மூப்பது போர் தேடலுக்காய்!
எழுத்தில்லா கதையின் பொருளாகி
இருக்கும் வரை வாசணையற்றதிரவியம்
என்பதாலா!!இறந்தால் 
கிடைக்கும் நினைவுச்சின்னங்கள்
என்பதால் நீ இறந்து
என் வாழ்வு க்கண்ணீருக்குள்
விதியானதே  இதனால்தானா!!

Monday 9 July 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

குருவி................


சொல்லி களைத்திட்ட
ஏழைகுருவி எட்டு பக்கம் கதை
அற்புத விளக்கமாச்சி!!
படித்தவர் எல்லோரும்
பாராட்டும் கதையாச்சி!!
யாரும் இல்லாக்குருவிக்கு
தனிமையே பொழுதாச்சி
தரித்திரம் வாழ்வாச்சி
புரியா உறவிற்கு குருவிமேல்
வெறுப்பாச்சி இருந்திட்ட கூடும்
புயல் பட்டு போய்யாச்சி
எல்லாம் இழந்திட்ட குருவிக்கு
தன்கையே உதவியாச்சி
சோர்த்திட்ட மனதிற்கு
நம்பிக்கை நிலவாச்சி
வெட்டவெளி வாழ்விற்கு
இருபுறமும் நதியாச்சி
பொல்லாத மனிதனுக்கும்
பேராண்மை வந்தாச்சி
வில்லாதி வில்லனுக்கும்
வீரமற்ற வால் கையாச்சி
பொல்லாப்பாய் வந்தருக்கும்
பொறுமையில்லா மனமாச்சி
குருவிக்கு கிடைத்த உணவு
வயிற்றிக்குள் புண்ணாச்சி
இருக்கும் கதைக்குள் இதுவே
பொருமைக்குரிய கதையாச்சி..............................

Wednesday 4 July 2012

உள்ளவரை.....................

காற்று மெல்ல வந்து
என் உடல் நனைத்து!
உன் உயிர் நான் என்றது!!

கொஞ்சமும் சம்மதமில்லா
என்உடல் அதனை பிடித்து சிறைவைத்து
என் நிமிடம் என் வாழ்வு இதுவொன்றது!!

வீரமாய் அறிவு எழுந்து எல்லா நிமிடமும்
என் நிமிடதான் என்றது !!!
அதைக்கேட்டகாற்று 
 மௌனமாய்  விலகிப்போனதால்
அறிவு தன்னை மறந்துஆணவத்தோடு நின்று
உன்னைக்கொலு வைத்து!!

உறவென்ற உரிமையால் உடலிற்கள்
ஏதே தோ ஆட்டம் போட1!

மெல்ல கற்று சொன்னது
உன்னிடம் உள்ளவரை
என் நிமிடம் தான் உன் நிமிடம்
இதை அறிந்தும் உன் உணர்ச்சிக்காய்
ஆடும் மானிடா நான் போகுவரை
நீ அடங்கிட மாட்டாய் !!!!

ரோஐா

தன்னைக் கொடுத்து வையத்திற்கு
வாசம் கொடுத்து  வையத்து
அழகின் மயக்கத்தில் வாழ்த்த
மலரின் கண்கள் !சிந்தி சிதறுது சிறு 
துறல் கற்றில் !!!இருப்பதுவும்
கொடுத்ததும் இறை கண்ணீர்துளியென்பதால்
எட்ட  நின்று எறியும்
கற்களை தட்டித் தடுக்கவே
தண் டனை கொடுக்கா முற்களை 
பக்கத்து துணையாய் கூடவோ கொண்டது!!
பக்கம் தெரிய  பக்கமான
பக்கத்து மானிடன் பக்குவம்
இல்லாது  பதறி பறித்து
பயனும் அடைத்த பின்!! சட்டென
தடுமாறி  கைவிட்டதால்
பட்ட காயத்தை பக்குமாய்
மறைத்து  ஈட்டியாய் பாய்ந்த
 முற்கள்ளை தப்பொன்றான்!!!
மலர் கொண்ட மென்மை
உண்மையானாலும்   தன்மென்மை
கண்டும்  தன்னையோ தவறு என்றவரை
 அழிக்கும்நியதியை எப்போ மாற்றும் 
இயற்கையென ஏக்கத்தோடு  காத்துகிடக்குது!!
நியதிக்குள் சிக்கிய வாசம் இறப்பால்
பேசப்படும் நியதியை மாற்றிடா  மாற்றம்பேசும்
வர்த்தையாய்   போனதால்................