Wednesday, 21 January 2009

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உறவால் நாம் சேர்ந்து
உரிமை பல கொண்டு
உறவோடு உறவானோம்
உறவாய் வாழ்வதற்கு
உறவாய் வந்த விதி
உறவாய் என்னைத் தொட்டு
உறவென எடுத்தால்
உறவே நீயில்லாது
உயிரோடு உலவுகின்றேன்
உறவாய் உனை நினைத்து

Wednesday, 14 January 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

கார்மேகம் வெள்ளமாய்
மண்ணில் கொட்டி தீர்ந்தாலும்
சூரியன் வானிடம் சிறைபட்டு
போனாலும்
தித்திக்கும் தமிழெடுத்து
பிறந்த இடம் பறிந்த
எதிரியின் முகம் பார்த்து
வாழுமிடமெங்கும் பொங்குக
தமிழே பொங்களாய்......

தோல்விதான் வெற்றியென்று
தெருவெல்லாம் மாவிலைத்
தோரணம் கட்டி!
சிகப்பு வர்ண மாவெடுத்து
வாசலெங்கும் தேசியக் கொடி
கோலமிட்டு!
பானைக்கு கல்லாய் மனதின்
உறுதியை வைத்து
எரிக்கும் தீயாய் எம் உறவை வைத்து
எரிந்த தீப் பொறி கொண்டு!
முத்தமிழலை அரிசியாய்
உலையிலிட்டு! செந்தமிழன்
செங்குருதியை பாலாக்கி
அச்சமும் பயமும் எம்மிடம்
வேண்டாமென பொங்குக
தமிழே பொங்களாய் என்றும்
நாளைய விடியலை நேசித்து

Monday, 12 January 2009

காலமே பதில்.....

கொண்டவன் வென்றவன்
கொள்கை கொள்பவன்
எம்மை அழிப்பவன்
ஆள்பவன் 
எல்லாம் காலத்தின்
விடையாய் தேடுது மனசு இன்று!!!

யாரிடம் யாரை கேட்க்க
உயிரின் உறவுகள் எங்கோ
அடுக்கடுக்காய் அழிய
ஆற்றிட துயரம் தேடியழையுது
மண்ணில் விடை தனை
பாவியர் மண்ணில் உயர்ந்திட
பாவியாய் ஆன எம்மவர் வாழ்கை
தினசரி செய்திதாளாய் பக்கத்துக்கு
பக்கமாகய் ஆராட்சி கட்டுரையில்
அவியுற்று அடுக்கடுக்காய் இறக்குது
எமக்காய்
உலகத்தின் நாடகம்
எதிரியின் வெற்றியாய் தெரிய
ஏமாற்றதால் ஏமாந்த எங்கள் இதயம்
கேட்குது காலத்திடம்!
உண்மையின் விலைக்கு நாங்கள்
ஆண்டுக்கு ஆண்டு கொடுத்த
உயிர்த் தியாகத்திற்கு பதில்
என்னவென்று ............

Thursday, 1 January 2009

வந்தது ஓர் வருடம் புதிதாய்.....

கோடி மக்கள் கனவை
சுமந்து வந்தது ஓர்
வருடம் மீண்டும் புதிதாய்
இன்று!!
தொட்டதை விட்டதை
கண்டதை தொலைத்ததை
கொண்டதை மறந்ததை
மீண்டும் தேடிட வந்தது
ஓர் வருடம் புதிதாய் இன்று!!

அக்கம் பக்கம் இருப்பவர்
குற்றம் குறை மறந்து
சாதி மதம் கடந்து
கைகள் கோர்த்து
கூடி மகிழ்ந்து கொண்டாடிட
மீண்டும் வந்தது ஓர் வருடம்
புதிதாய் இன்று!!

பகை மறந்து சிரிந்து
நாளை உயிர் குடிக்க
மனிதனை மனிதன் வென்று
காலத்தைக் கொள்ள
மீண்டும் புதிதாய் தேடிட
வந்தது ஓர் வருடம் இன்று
மட்டு் மனிதனாய் வாழ............