Wednesday 28 November 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தீப்பொறி தன்னை தன்னகத்தே
கொண்டு,தீச்சுவாலையோடு
கலந்திட்ட எம் உயிர்த் தியாகங்களே

உங்கள்
எண்ணற்ற சிந்தனை சிதறல்களை
ஒன்றாக்கி மாறாக் கொள்கையேடு
கனவிலும் தேசியத்தை வளர்த்து
உங்கள் உள்ளத்தின் ஆசைகளை
எமக்கு தந்து, எம் உயிர் காத்து!
மண்ணுயிர் மீட்டிட,மரணத்தின்
வாசலில் உடல் கொழுத்தி, எம் இருள்
போக்கிய தன்னலம் காணா தியாகங்களே!

உங்கள்
உயிரை துச்சமாய் தூக்கியெறிந்து
ஈழக் காற்றினை சுவாசக் காற்றாய்
சுவாசித்து உடலை எமக்காய் தந்த
உயிர் தியாகங்களே உங்களுக்காய்
கவிதைப் பூக்களால் கோர்க்கின்றேன்
ஓர் அஞ்சலி மாலை....

Tuesday 27 November 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

விதையாய் விழ்ந்து விருச்சமாய்
எழுந்து,விடியலுக்காய் வித்தான
முத்துக்கள் இவர்கள்

எட்டுத்திக்கும் விடுதலைக் காற்றனுப்பி
உலகின் பார்வையை எம் பக்கம் திருப்பி
புரியா உள்ளங்களை புரிந்திடச் செய்து
கடலோடும் புயலோடும் தரையோடும்
தீயாக எரிந்து வானேறி வீரம் காட்டி
விதையான சுயநலமில்லா சுவாசத்தின்
முத்துக்கள் இவர்கள்........

எம் மண்ணின் ஒளியெல்லாம்
அவர் முக ஓவியமாய் விரிய
இருளுக்குள் ஒளியாகி,இருண்ட
வாழ்விற்கு வெளிச்சமாகி
வானத் திங்களின் ஒளியெடுத்து
உலகத்தின் பார்வையில் வீழ்ந்து
விடுதலை உணர்வை எம் இதயத்தில்
வித்தாக்கி மறைந்த எம் முத்துக்கள்
இவர்கள்..................................

Tuesday 20 November 2007

அழிவுகள்

தன் இனம் அழித்து
உயிர் எடுத்து
இரத்தத்தால் பூமி நனைத்து
மனுதர்மம் காக்கின்றது
யுத்தமென்னும் அழிவு

சுறாவளிக் காற்றாய்
சுற்றி சுழன்று
வேரோடு பிடுங்கி
வெற்றுடல் குவித்து
வேடிக்கை காட்டி
நிக்கின்றது ஓர் அழிவு

பூமி வெடித்து தீப்பொறி
எடுத்து பூவுடல் எரித்து
கடல் பொங்கி உடல் தழுவி
உயிர் குடித்து ரசிக்கின்றது
இன்னுமோர் அழிவு

இப்படி
அழிவின் மேல் அழிவு வந்து
அழிகின்ற பூமி தெரியாமல்
கற்பனையில் கிறுக்கின்றேனோ
பூமியின் அழகு தனை
புரியாமல்..................தவிக்கின்றேன்

Sunday 18 November 2007

உணர்வு தந்த சில கிறுக்கல்கள்..

ஈழத்து மண்ணே நான்
சில காலம் உன் மடியில்
வாழ்ந்திட வேண்டும்!
அகதி வாழ்க்கையில் நான்
தொலைந்த நின்மதியை
மீண்டும் தேடிட வேண்டும்!
இருக்கும் காலம் இனித்திட
விரைவில் நீ மலர்ந்திட
வேண்டும்...

*****************
ஈழமே நீ வேண்டும்
அதற்காய் நாங்கள் இங்கே
இனைந்திட வேண்டும்

வார்தையாலம் வீண்வாதம்
விட்டிட வேண்டாம்
தமிழர் நாங்கள்... மற்றவை
மறந்திட வேண்டும்

பசிக்காய் அழுதிடும்
குழந்தையின் அழுகுரல்
நிருந்திட வேண்டும்
இங்கே இனைந்திட்ட இதயங்கள்
நாங்கள் சூழ்நிலை அறிந்து
கரம் சேர்ந்திட வேண்டும்

**************************
உறவின் உயிரைக் காத்திட
முடியவில்லை
ஆனாலும் உணர்வில் ஓர் வலி
சொல்ல தெரியாவில்லை

உண்டேன் உறங்கினேன்
ஆனாலும் எதையோ இழந்ததாய்
ஒர் தவிப்பு எனக்குள்
என்னை
தொலைத்து கோழையாய்
இழந்த விட்ட தமிழ் உணர்வால்
துடிக்கின்றது இதயம்
எதனால் நானும் தமிழ் என்பதாலா
புரியவில்லை ராமா
ஆனாலும் நீயாவது
காத்திட தோன்றிடுவாயா?
கட்டத்தரையில் கண்ணீரோடு
என் உறவு .....வலிக்கு எனக்கு.........
****************
முள்வேலிக்குள்
இவனை
சிறையிட்டாலும்
இன்று சோர்ந்திடும்
இவன் இதயம்

நாளை ஒர் நாள்
முற்கம்பிகளை
உடைத்தெரிந்து
விரிச்சமாய்வெளி் வரும்

இவன் கண்களில்
இன்று தெரித்திடும்
தீப் பொறி நாளைய
விடுதலையை
சொல்லிடும் எரிமலைக்
காற்றாய் .......

****************
வீரரே உம் இரத்தத்தில்
முளைத்திட்ட
செடிகளெல்லாம்
உமாக்காய் பூக்கள் பூக்க
உம் மரணத்தால்
உதிர்ந்திட்ட வெள்ளை
மலரெல்லாம்
சிகப்பாய் பூத்திட்டது
உம் கல்லறையின்
பக்கத்தில் உறங்கிட
அல்ல
உம் கனவுகளை
மீட்டெடுத்து எம்
தேசத்தை காக்க.........
...................................................
தன்னுடல் தனை மறந்து
தனாக்காய் வாழாது
எமாக்காய் வாழும்
தியாக தீபங்கள் இவர்கள்
ஆனால்....
இன்று பூவுடலாய்
பூமியில் சரிந்த வேளை
இழிவின் மேல் இழிவு செய்து
கொடுமைக்கு மேல் கொடுமை
செய்து
அரக்கனாய் ரசிக்கும்
மனிதனின் மத்தியில்
மனித நேயத்தின்
புனிதம் சொல்லி
புனிதமாய் மறைந்தனர்
மறையா மறைவில்..
...........................................
வென்று சேரட்டும்
கைகள்
ஒன்று கூடட்டும்
இதயங்கள்
வெடித்து சிதறிய
மனிதநேயத்தால்
சிதறிக் கிடக்கும் எம்
உறவின் துயர்காத்து
இருளில் புதையும்
மண்ணின்
விடியலைத் தேடி
ஒன்று சேரட்டும்
கைகள்
..............................................
தமிழர்கள் நமக்காய்
ஒர் இடமின்றி
தவித்திட் காலம்
வென்று எமக்காய்
வரைத்திட்ட தேசத்தின்
புதிய பூபாலம்
எமக்காய் பிறக்க
நம் வீரர் உறுதிகொண்டு
இணைந்திடுவோம்
ஈழத்தின் தாகத்தோடு

Saturday 17 November 2007

சுமை தாங்கி

இன்பங்கள் பலகோடி அவள்
வரவாள் உன்னைச்சேர
துன்பமே வந்ததென்று
கிண்டலும் கேலியுமாய்
எத்தனை காயங்கள் நீ கொடுத்தாலும்
உன்னைத் தாங்கிக் கொள்ளும்
சுமைதாங்கி அவள் தானே...

எத்தனையோ விண்மீன்கள்
உன் வாழ்வில் வந்து வந்து
போனாலும் , நீயே அவைகளை
ரசித்தே நின்றாலும்,உன்
இருளுக்கு ஒளியாய் இறுதிவரை
உன்னோடு வருபவள் அவள் தானே!


தன்னுயிர் உள்ளவரை
உன்னை சுமந்து உன் கருவை சுமந்து
உன் வாழ்வை தன் வாழ்வாய்
எண்ணி, உனக்காய் சுமக்கின்ற
சுமைதாங்கி என்றும் அவள்தானே..............