சோர்வாய் ஒரு பார்வை
அழகினைக் கண்டுகொள்ள
ஒரு இதயத்துடிப்பு
யாருக்கும் இல்லா ஒரு
சோகம் ஆறுதலில்லா
அருகாமை அவளோடுமட்டும்
நிரந்தரம் !!!
சோர்வாய் ஒரு பார்வை
அழகினைக் கண்டுகொள்ள
ஒரு இதயத்துடிப்பு
யாருக்கும் இல்லா ஒரு
சோகம் ஆறுதலில்லா
அருகாமை அவளோடுமட்டும்
நிரந்தரம் !!!
காலத்தின் கண்ணீருக்குள்
விதைக்கப்படட தனிமை
கோடிப்பெயருக்குளும்
கண்டுகொள்ள பென்குயின் வரலாறு !!
எதை இவ்வுலம்
தேடுகின்றது
எதற்க்காக இவ்வுலகம்
போராடுகின்றது இதுவரை
புரியாமனிதம்
எது எதுவென தேடினாலும்
இதுவென சொல்லும் மனிதன்
சொல்லுக்குள் அடங்கிவிடுகின்றது!!!
நெஞ்சம் வலிக்கின்றது
அவளுக்கு
கொஞ்சம் உறக்கம்
கடன்கேக்கின்றது அவளை
இல்லையென்றே போகின்றது
நாட்கள்! அவள் கேளாமல்
துடைக்கின்றது துன்பம்!
அவள் கேட்டும் கிடைக்காமல்
கொலைசெய்யப்பட்ட்து
அவள் ஆசைகள் இருந்தும்
அவள் பெண்ணானால் !!
அவள் !
மெல்ல மனசை எழுப்பிட
முயல்கின்றாள்
அவள் மனசோ இறந்திட்ட
உடல்போல் கிடக்கின்றது
எதையும் நம்பமறந்து !!பொய்களை
கேட்டுக்கேட்டு இருப்பதும்
பொய்யானது அவள் மனசுக்கு மட்டும் !!!