Monday, 24 November 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

 எழுந்தே  துடிக்கும் 

வீரத்தை எரித்தே 

சாம்பலாகும்  வீரம் 

தமிழிடமே  கற்றிடவேண்டும் 

பேசும்  சுகந்திரம்  

காக்கமறுக்கும்  வாதம் 

தலைப்பாகை !!

Friday, 14 November 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,


நேர்மையானவன்  முன்னே 

பல வழி புதைகுழிகள் 

விழுந்து  எழுந்து 

நிமிர்ந்து  நிற்பவனே 

சிறந்த  தலைவனாகின்றான் 

Thursday, 13 November 2025

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அன்பின்  கிண்ணம் 

ஏமாற்றத்தின் வேர்வைத்துளிகளில் 

நனைவதால்  வார்தைகள்

ஓட்டாமல்   விழுந்து  ஓடுகின்றது 

இதயங்களை  விட்டு 

வம்மின் கிண்ணம் 

வாசனைத்துளிகளால் 

நனைவதால் இதயங்கள் 

ஓடாமல்அழகாய்  

நனைகின்றது புரியாமல் !!




குட்டிக்குட்டிச் சாரல்......,

வீசியடித்த சூறாவளிக்காற்றில் 

வீசியெறியப்படட  ஒற்றை 

மரணம்   விடுதலையானா  

மரத்தின்  கீழ்  மரணம்   புரியாமல் 

போர்வை  போர்க்கின்றது !!!

Wednesday, 12 November 2025

குட்டிக்குட்டிச் சாரல்......,

புரிந்திட  ஒருஅன்பை  



தேடினேன்  புரியாமலேயே 

பலவேசம் நேசமானது !! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

பட்டுக்கொண்டு  இருக்கும் 

பட் டமரத்திற்கு   கலெறிந்து 

போகின்றான்  நேசக்காரன் 

 நீறுற்றி  காத்திடும்  

நேசமற்றதால்!!  

குட்டிக்குட்டிச் சாரல்......,

வாழ்க்கையும்மில்லாமல்  

வாழவுமுடியாமல்  எதையும் 

சொல்லாமல்  மௌனமாய் 

போகின்ற   வாழ்க்கையின் 

கதவுகளை  திறந்துகேலிபேசிட 

நிமிடம்  தேடும்  நிமிடம் 

காகிதகப்பலில்  வாழ்க்கையே 

நடத்திடலாமென  கனவுக்குள் 

 மிதக்கும்  மனிதர்களின்  நிமிடங்களே !!