Sunday, 26 June 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அந்திக்குள் ஒர்பொழுது
அந்தி வானம் சிந்ததும் பொழுது
தென்றல் சொரிந்த காதல்
சிந்திய செந்தேனாய் இதழ் இனிக்க
வெந்தேன் உடல்  சிவக்க நானும்!

Friday, 24 June 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தலைமுறைகளாய் தலைகாத்த
தலைசிறந்தவர்கள் கவசம்
தனியாய் வந்தததுவோ வாழ்வில்
தலைகள்  உருளுதே
தனிதனியயாய் கவசமின்றி !!

சிந்தனை யெண்ணமெல்லாம்
தனிதனி வலிகளால் வந்ததுவோ வாழ்வில்
வளர்தும் மனிதன் வளராது
வாடுகின்றான் வாழ வழியின்றி1!

வழிமுறை வாழிபாட்டுத்தோடலெல்லாம்
மனிதனுக்கு தவமின்றி கிடைத்ததுவோ
வாழ்வில்
புறாக்களுக்கு கிடைத்திட்ட சமாதானம்
மனிதனுக்கு  கிடைக்காது தவிக்கின்றான்1!

தலைவனுக்கும் தலைவிக்கும் இடையோ
தலையணைசண்டையானதோ வாழ்வில்
வாய்குள் வார்தை சிக்கா
வாய்க்கால் சண்டைக்கு வரப்பு சாட்சியான
தே!!

Sunday, 19 June 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னை காணும் கண்கள்
என்னிடம் ரகசியம்   பேசிவிட்டு
போகின்றது
உனதருகே ஒர் அழகான
தேவதையிருந்த போதும்
விசித்திரமாய்  தோன்றினாலும்
புன்னகையோடு  ரசித்துக்கொண்டேன்
என் ஏமாற்றதை!!!

Wednesday, 1 June 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் உயிர் இருக்குமு்  வரை
அவன்!
கற்பனைகள் என் வாழ்கையில்
நான்!
  இறந்தபின்னர் அவன் உண்மைகள்
என் கல்லறை கற்கள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு உயிர் வாழும் வரை
அறியா வாழ்கை ஒரு உயிர்
அழிந்தபின்னர் பிறக்கின்றது
மனிதனுக்கு!!
ஒரு உயிர் இருக்கு வரை
வராப்பாசம்! உயிர்
இல்லாத போது வருகிறது

குட்டிக்குட்டிச் சாரல்......,


தன்னுயிரின் அர்தங்கள்
புரியா மானுடன் கவலைகள்
சுமப்பதால்  பிறவுயிர் உணவரியாது
சிதைக்கின்றான் நித்தம் ஒர்காரணம்சொல்லி1!