Saturday 6 September 2014

கண்ணீர் அஞ்சலி

அழ்ந்த உறக்கத்தில் கற்சிலையாய்
உம் உருவம் கள்ளமின்றி படுத்திருக்க
பதறித்துடிக்குதையா எம் இதயங்கள்
உம்மையிழந்து

அள்ளி நிறையா நிறைகுடமாய் கண்கள்
உன் மீதுகொண்ட அன்பால்  நீரை
தழும்பி வடிக்குதையா உம்
பிரிவை ஈடு செய்திட முடியாது

ஆற்றிடா துயரமதை ஆற்றிட
ஆறுதல் தேடிய  எம்மோடு
உம் கரம்பிடித்து உம்நினைவுகள்
அலையாய் மேயெழுப்பி அணைத்து
தவிக்குதையா எம்மோடு

விழுந்தவேரில் தோன்றும் விருட்சத்தில்
நாளைய உம் கனவுகள் நிலைத்திட
கரம் கூப்பி தொழுகின்றோம் உம்
ஆத்ம சாந்திக்காய்!!!

No comments: