Thursday, 29 September 2011

தொண்டன்

கொடுத்த தாய்பாலில்
சுரந்த வீரம் எழுந்து
வேங்கையானதால்!!

பிறந்தமண்ணில் விடுதலை தேடி
பிடித்த கைகளுக்குள் நிறுந்திய
தலைவர்!! ஜெயித்திட தன்னுடல்
கிழித்தெடுத்து வைத்திட்ட
வெற்றித்திலகம் அழித்திட முன்
கிடைத்த வெற்றி  பெற்ற தாயின்
கற்புக்கு காவலில்லா தேசம்......
மண்ணில் மக்களை காத்திட
வந்த தலைவன் முன்னோ தொண்டன்
காதுகளில் ஒலிந்த முதல்  செய்தி ..........


Sunday, 25 September 2011

எப்படி உன்னால்..........

என்
இதயத்துடிப்பு நீ
என்றாய்!!
என்
உயிரின் சத்தம் நீ
என்றாய்!
என்
உணர்வின்நாடியோ நீ
என்றாய்!
என்
இரவு பகலும் நீ
என்றாய்!
என்
கனவும் நினைவும் நீ
என்றாய்!
என்
உறக்கமும் விழிப்பும் நீ
என்றாய்!
எப்பவும் எல்லாமே நீ
என்றாயோ!
 எப்படி முடிந்தது
உன்னால் என்னை  எப்பவும்
மறந்தோ வாழ!!
அப்போ நீ
சொன்னதெல்லாம் ...............
அந்த நிடத்து பொய்களா?