Friday, 21 August 2009

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பட்டதால் தொட்டு
தொட்டதால் கெட்டு
கெட்டதால் விட்டது ஒரு உறவு!

விட்டதால் தொலைந்து
தொலைத்தாய் தேடி
கோவிலில் அழையுது ஓர் உறவு!

மெந்தையிட்டு வீட்டில்
நின்மதியை உறங்க விட்டு
வீதியில் தேடுது ஒரு உறவு!

உயிரோடு தன்னைத் தொலைத்து
உறவிற்கு உயிலெழுதி
ஒழுங்காய் வாழ  உறவு தேடுது
ஒரு உறவு!

ஒரு உறவை கூட்டில் ஏற்றி
புதிதாய் ஒரு இதயம் வேண்டி
வாழ்வை வாழ ஆசைபடுது ஒரு உறவு.........

Wednesday, 19 August 2009

மருதானி சிகப்பு

நட்ட நடுவானில்
விட்டு போன மேகம்
தொட்டு மறைந்த
தேய் பிறைநிலவு!!

விட்டு போக கனவை
கட்டியணைந்த படி
சுட்டித்தமாய் கட்டிபோட்ட
 சுட்டி சேட்டைகளோடு
சுமையான சுமைகளை
சுகமாய் சுமந்து கொண்டு!!

வெட்ட வெளி காற்றிடையில்
இருளின் நிழலுக்கு
தீபமின்றி விளக்கேந்தி
நெட்ட நெடும் பாதையில்
தொலை தூரத்து நினைவோடு
தென்றல் உதிர்ந்த பூவில்
பாதம் வைத்து போகின்றாள்
முற்தரை மேல்...