Saturday, 24 August 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

எடுத்து நடந்து
 எந்தனிக்கமுடியவில்லை
எவரிருந்தும் எந்தவலியும்
போகவில்லை
படுத்துறங்கிட கண்களும்
பழகவில்ல
துரத்திவரும் துயரங்களும்
நிற்கவில்லை
ஓடியுழைத்தும் சங்கடம்
தீரவில்லை
அம்மா அப்பா கண்ணீருக்கும்
அர்தம்புரியவில்லை
தனிமை சுட்டாலும்
சிக்கல்கள் விலகவில்லை
நோவே வந்தாலும்
ஆறுதல்சொல்வாரில்லை
புரண்டு சுழலும் நாவிற்குள்
விழுந்த காயம்ஆறவில்லை
நடக்கும் பாதைவழி
முற்கள் மறையவில்லை
இருக்கஇருக்க
கொடுமையும்மாறவில்லை
இன்னும் இன்னும் கூட்டிக்கூட்டி
சுமையை ய் வாழ்வதற்கு இந்த
கூட்டுதான் எதற்கு இறைவா!!

Thursday, 22 August 2013

லொள்ளுக்கவிதைகள்

இலட்சியம் கொணடவன்
காதலி மாற்றம் தேடி
வாழ்வில் ஏக்கத்தோடு
காலகாலம் அவனுக்காய்
காத்திருக்க!!

வறுமைக்காதலன் காதலி
தடைகள் கண்டு ஏக்கம்கொண்டு
அன்புகாதலால் தாய்மைதொட்டு
பாட்டிக்கால மாற்றத்தில்
தொலைகின்றாள்!!!


Sunday, 18 August 2013

பொம்மை!!ஆ

இல்லாதவள்  உன் நினைவில்
இல்லாமலே உன்னுள்
உறைந்தவள் !
நீ எண்ணாதவள் என்றுமே
உனக்கானவள் ! உன்
தேவையானவள் !
மொளனமானவள்
நீ காத்திடாதவள்
கண்ணீரானவள் உன்
கடமையானவள் உன்னேடுஅழகானவள்!
 நீ சுமக்காதவள் உன்
உறவானவள் !!
உரிமையற்றவள் உன்
உயிரானவள்
உண்மையானவள் நீ தொலைத்த
நொடியானவள்!!
வலிமையானவள் உன்
மகிழ்வானவள் நீதேடித்
தொலைத்தவள்
தொல்லையானவள் உன்
வெறுப்பற்றவள் நீ சேர்த்திடாதவள்
தனியானவள்!!