Saturday, 8 June 2013

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

கிறுக்கியிவள் கிறுக்கதொடங்கி
கிறுக்கிய காலம் இத்தனையா?
புகழ்சோர்க்க கிறுக்கவில்லை
புகழ்பவருக்காயும்  கிறுக்கவில்லை 
இருந்தும் இவள் கிறுக்கல்கள்
தொடர்கின்றது  இவளோடு உறவாய் !

தனிமைககு துணையாகி
சோகதிற்கு பாரமாகி
கண்ணீருக்கு கைக்குட்டையாகி
மொளனதிற்கு மொழியாகி
தமிழுக்குள் பிழையாகி
அறிவில்ல தேடலாகி
ஏதோதோ சொல்லச்சொல்ல
இவள் இவளாய்
வாழத்தொடர்கின்றது கிறுக்கல்  !

கவிதைக்குள் கவியாகி
வடிவமேயில்லா பொருளாகி
வார்தை சொட்டும் தேனாகி தேளாகி
 தொடர்கிறது அவளோடு! 

அங்கங்ககே சோர்வு வந்து
தட்டித் தட்டித்தூங்கவைக்க!
ரசிப்பவர் என்னையே! எனக்கு
அறிமுகம் செய்ய !
 மனதிற்குள்ஒர் நன்றி
 உண்மையில் தோன்ற!
படைப்பாளிஎன்னும் உண்மையும் புரிய!
விட்டு போன உறவு போல் 
என் கிறுக்கல்கள் 
ஆனாலும்! என் மனம் என்னையே  
  நம்பாமல்  எனககுள் எப்படி 
கவிதையெனத்தெரியாது
கிறுக்கின்றேன் கிறுக்கியாய்!!
 இறுதிபயனம்வரை தொடரவே ஆசை
இந்த ஏழை தனக்காய் விட்டு சொல்ல
இது மட்டும் தான் உறவாய்  உள்ளதால்!!!

No comments: