Friday 22 February 2013

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

காலத்தை மரணத்திடம்
கொடுத்து விட்டு
அரக்கனிடம் நாயத்தை தேடி
நாதியற்று நின்று கொண்டு
நாடிதுடிக்க கதைபேசி
வாழ்வதால் என்னலாபம்

வீழ்பதும் எழுவதும்
நாமாகும் போது வீழ்ந்தே கிடந்தால்
வாழ்வது யாரு வாழ்வுமது ஏது

கேலிபேசி கேலிபேசி
வாழ்வது நமக்கு கேள்வியாகி
போனபின் இன்னும் மண்ணுக்குள்
தேடித்தேடி சொன்னாலும்
மாறுமா எம் மனம் தேடுமா புதுயுகம்

ஆடை அணிகலன் அடுத்த  வீட்டாருடன்
அதிகபடி தேடி அணிந்து பெருமை பேசி
நாகரிகத்தேடலில் புதுமை காணும்
எம் புதிய பாதைக்கு  அடுத்தவர்
ஆவி போனாலென்ன   சாமியே போனாலென்ன

நம் வாழ்வில் நாம்காணும் இன்பம்
மற்றவர் காணவரை துன்பமில்லை

எழுச்சி பிறக்க அங்கங்கே
எழுந்து பேசி பயனில்லை எழுது கருவறை
தொடக்கம் கல்லறைவரை  விடுதலை காற்றின்
வெப்பத்தை  சொல்லட்டும்  குழந்தை வரை
கிழவர் வரை இது தான் தேவையென்று

பிரிந்து பிரிந்து கிடந்த மனதில் எழுப்பு
 தனக்காய் ஓர் விடுலைத்தேடலை
இது முடியாதென நினைத்து கொண்டு
விடுதலை தேடினால் கடசிவரை தேடலே  மிச்சும்!!!!

No comments: