Thursday 25 February 2010

வட்டமேசைமகாநாடு

நாலு நாலாய் நால்வர்
வந்து வந்து போக
இட்ட மேசையும் கதிரையும்
பேச்சு வார்ந்தை நடந்துகின்றது
நாலு திசையும் கேட்க!

வட்ட மேசையோடு
வாக்கியம் அமைந்து
வார்தையால் வானம் தொட்டு
பேசி வந்த கடமை
வாக்கு வாதத்தால் வென்று
திசைக்கொருவராய்
திசையின்றி நால்வரோடு
கூடி சென்றதால்....
அப்படியே!அமர்ந்த கடமை
விட்ட வார்தையை
தொட்டு எடுந்து
விட்டு சென்ற மேசையோடு
கதிரையோடும் கடமைக்காய்
தொடர்ந்து பேசுகி்ன்றது!

நாலு நாலாய் நாடுகளும்
நாலு பக்க இடைவெளியில்
பக்குவமாய் பிரிந்து நால்வருக்காய்
கூட! சிதறும் பூகோலம்
கெட்டதும் அறியாது நல்லதும்
புரியாது நால்வருக்காய்
வட்ட மேசை மகாநாட்டில்
மனிதனைத் தொலைந்து
மனித வெற்றிக்காய்
கடமை துயர் குடிந்து
துப்பும் இரத்தம் பூசும் சாயமாய்
மறையும் மனிதன் பிறப்பிந்த
வாத்தில் தொலைந்த உயிராய்
தொடருது...........

No comments: